ஆஸ்திரேலியா: பறக்கும் ட்ரோனை பிடித்த முதலை

ஆஸ்திரேலியா: பறக்கும் ட்ரோனை பிடித்த  முதலை
X

முதலை கவ்வியதால் சேதமடைந்த ட்ரோன்

டார்வினில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவில் குறைந்த உயரத்தில் பறந்த ட்ரோனை ஒரு முதலை இரையென நினைத்து தாவிப்பிடித்தது.

ஆஸ்திரேலிய ஒளிபரப்புக் கழகம், டார்வினில் உள்ள முதலை வேட்டைக்கு தடை விதிக்கப்பட்ட 50 வது ஆண்டு நிறைவு விழாவிற்காக க்ரோகோடைலஸ் பூங்காவில் படப்பிடிப்பு நடத்தி வந்தது.

ட்ரோன் முதலைக்கு மேலே சென்று படம் பிடித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரிலிருந்து ஒரு முதலை செங்குத்தாக எழுந்து ட்ரோனை பாய்ந்து பிடித்து தண்ணீருக்குள் சென்றது.

சிறிது நேரத்தில் ட்ரோனை வெளியே துப்பிவிட்டதால், முதலை ட்ரோனை கவ்வும் படக்காட்சியை மீட்டெடுக்க முடிந்தது.

Tags

Next Story
ai future project