கொரோனா தடுப்பூசி பிரபல கம்பெனிக்கு முக்கியத்துவம் !

கொரோனா தடுப்பூசி பிரபல கம்பெனிக்கு முக்கியத்துவம் !
X

ஜான்சன் அண்ட் ஜோன்சன் மற்றும் அஸ்ட்ராஸெனெக்கா ஆகிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவங்கள் ஒரே மருந்தாலையில் தமது இரு தடுப்பு மருந்துகளை தயாரித்து வந்தனர், இருப்பினும் தொழிலார்கள் இரண்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் மூலப்பொருள்களை கலந்ததால் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரித்த 15 மில்லியன் தடுப்பு மருந்துகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தெரிவிக்கையில் தமது நிறுவனம் (Emergent BIOSolutions) ஆலையின் கட்டுப்பாட்டை எடுத்துள்ளதாகவும் தாம் அரசுடன் ஒப்பந்தம் செய்தது போல் மே மாதத்துக்கு முன்னர் 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்கும் என்றும் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது

இதேவேளை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 4 மில்லின் அஸ்ட்ராஸெனெக்கா தடுப்பு மருந்துகளை கடனாக கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு வழங்கி உள்ளது.

அமெரிக்காவில் அஸ்ட்ராஸெனெக்காவுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை, இருப்பினும் அனுமதி வழங்கப்பட்டாலும் அந்த மருந்து அமெரிக்காவுக்கு தேவைப்படாமல் போகலாம் என்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பட்டு நிறுவன மருத்துவர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.


Tags

Next Story