சீன நகரத்தின் எல்லையில் பரவும் கொரோனா

சீன நகரத்தின் எல்லையில் பரவும் கொரோனா
X

மியான்மரின் எல்லையில் உள்ள ஒரு சீன நகரத்தில் கொரோனாவால் சுமார் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதல் பாதிப்பு திங்களன்று அடையாளம் காணப்பட்டது, பின்னர் நெருங்கிய நண்பர்கள் மற்றும் தொடர்பு உடையவர்களை சோதனை செய்தபோது ஆய்வறிக்கையில் ஐந்து பேர் சீன குடிமக்கள், நான்கு பேர் மியான்மர் நாட்டவர்கள் என்று யுனான் மாகாண சுகாதார ஆணையம் ஆன்லைனில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பரிசோதனை செய்தவர்களில் 22 முதல் 42 வயது வரை உடையவர்கள் இருந்தனர்.

இதையடுத்து சுமார் 2,10,000 மக்கள் தொகை கொண்ட ருயிலி நகரம், அனைத்து குடியிருப்பாளர்களும் கோவிட்டுக்கு பரிசோதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.மேலும் ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட குடியிருப்பு வளாகங்கள் பூட்டப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி