மில்லியனை தாண்டியது கொரோனா பாதிப்பு

மில்லியனை தாண்டியது கொரோனா பாதிப்பு
X

2021 ஆண்டு முதல் கனடா அரசாங்கம் வெளியிட்ட தரவுகளின் படி மேலும் 6,846 தொற்றுகள் பதிவாகி உள்ளது, இவற்றையும் சேர்த்து மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,000,545ஆக உயர்ந்துள்ளது.கனடா அரசு புதிதாக 117,227 கோவிட் சோதனைகளைச் செய்துள்ளது, இதுவரைமொத்தம் 27,726,348 கோவிட் சோதனைகளைச் செய்துள்ளது.

தொற்றிலிருத்து இதுவரை 921,459 பேர் மீண்டுள்ளார்கள்.கியூபெக் மற்றும் ஒன்ராறியோவில் கொரோனா வைரஸின் பாதிப்புகள் மிக அதிகமாகக் காணப்படுகிறது.கடந்த 14 நாட்களில் ஒன்ராறியோவில் மிக அதிகமான தொற்றுகள் பதிவாகி வருகிறது.

இது ஒன்ராறியோவில் 31,475 ஆகவும் கியூபெகில் 13,267 ஆகவும் பதிவாகி உள்ளது. இது பிரிட்டிஷ் கொலம்பியாவில் 11,628 ஆக உள்ளது.கனடாவில் கடந்த சனி 6,258,003 கொரோனா தடுப்பு மருந்துகளைப் ஏற்றப்படுள்ளது.

மொத்த மக்கள்தொகையில் 14.614% விகிதம் பேர் குறைந்தது முதலாவது தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளனர். அவர்களில் 5,554,343 ஒரு தடுப்பு மருந்தை மட்டும் பெற்றுள்ளனர் மேலும் 703,660 பேர் இரண்டு தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளனர்.கனடாவில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவிகிதம் 2.377 பேர் பலியாகி உள்ளார்கள்.

Tags

Next Story