பிஞ்சு குழந்தைகளை கொலை செய்த சீன தம்பதிக்கு நிறைவேறியது மரண தண்டனை

பிஞ்சு குழந்தைகளை கொலை செய்த சீன தம்பதிக்கு நிறைவேறியது மரண தண்டனை

கொலை செய்யப்பட்ட குழந்தைகள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தம்பதியினர்.

பிஞ்சு குழந்தைகளை கொலை செய்த சீன தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சீனாவில் பிஞ்சு குழந்தைகளை கொலை செய்த தம்பதியினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சீனா நாட்டை சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் ஜாங் போ. இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.. மனைவி பெயர் சென் மெய்லின்.2 குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆனால், தனக்கு கல்யாணமானதையே மறைத்துவிட்டு, செங்சென் என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி வந்தார்.

எந்த ஒரு பொய்யையும், நிரந்தரமாக யாராலுமே மூடி மறைத்துவிட முடியாது என்பதுதானே உலக நியதி? அதன்படியே, கடைசியில் செங்சென்னுக்கு உண்மை தெரிந்துவிட்டது.

ஆனால், "நீயின்றி நானில்லை" என்ற ரேஞ்சுக்கு கலர் கலராக காதல் ரீல்களை அவிழ்த்து விட்டார் ஜாங் போ. இதில் மயங்கி கிறங்கி விழுந்தார் செங்சேன்.அவனது அபரிமிதமான காதலால், அவனது பொய்கள் அத்தனையையும் மன்னித்தாள்.ஆனாலும் முன்புபோல் நெருங்கி பழக அவளால் முடியவில்லை.

அதனால், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, அதன்பிறகு வந்து தன்னை மணந்துகொள்ளும்படி கண்டிஷனை போட்டாள். செங்சேன் மீதிருந்த கிறக்கத்தில், ஜாங் போ அப்படியே கீழ்ப்படிந்தான்.. விவாகரத்து செய்யவும், 2 குழந்தைகளை தன்னுடைய கணவர் ஜாங் போவிடம் விட்டுவிட்டு, முதல் மனைவி சென் மெய்லின் பிரிந்து சென்றுவிட்டார்.. அதற்கு பிறகு, ஜாங் போ, 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு செங்சேன்னிடம் வந்து சேர்ந்தார்.. முறைப்படி செங்சேனை திருமணமும் செய்து கொண்டார். இப்போது, முன்பைவிட கூடுதல் உரிமையும், அதிகாரமும் கணவனிடம் செங்சேனுக்கு கூடியது.. ஆனால், முதல் திருமண வாரிசுகளான அந்த குழந்தைகளை செங்சேனுக்கு பிடிக்கவில்லை.

பெண் குழந்தைக்கு 2 வயதாகிறது.ஆண் குழந்தைக்கு 1 வயதுதான் ஆகிறது.. இந்த குழந்தைகளை பார்க்கும்போதெல்லாம் ஒருவித எரிச்சல் செங்சேனுக்கு வந்துபோனது. ஒவ்வொருமுறையும் உல்லாசத்துக்கு ஜாங் போ அழைக்கும்போதெல்லாம் மறுப்பு சொன்னார்.. மனைவியை துரத்திவிட்டதுபோல, இந்த குழந்தைகளையும் விரட்டியடித்தால்தான், உல்லாசத்துக்கு உடன்படுவேன் என்று இன்னொரு கண்டிஷன் போட்டார் செங்சேன். ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக, செங்சேன் கூறிய, இந்த வார்த்தைக்கும் கட்டுப்பட்டான் ஜாங் போ.. தன்னுடைய 2 குழந்தைகளையும் கொலை செய்ய முடிவெடுத்தார்.. மாடியிலிருந்து குழந்தைகளை தூக்கி வீசி கொன்றுவிடலாம் என்று தன்னுடைய யோசனையை சிங்சேன்னிடம் சொல்லவும், அதற்கு அந்த பெண்ணும் சம்மதித்தாள். இவர்கள் மிகப்பெரிய அப்பார்ட்மென்ட் ஒன்றில் 15வது மாடியில் குடியிருந்தார்கள். அதனால், தங்கள் வீட்டு மாடியிலிருந்தே, ஜன்னல் வழியாக 2 குழந்தைகளையும் தூக்கி எறிந்தார் ஜாங் போ. இந்த குழந்தைகளை கொல்வதற்கு, சாங்சென் பெரிதும் ஒத்துழைப்பு தந்தாள். 15 மாடி உயரத்திலிருந்து தரையில் கீழே விழுந்ததில், 2 பிஞ்சுகளின் மண்டைகளும் உடைந்து தெறித்தது.. உடல்களும் சிதறி இறந்தன.

விஷயத்தை கேள்விப்பட்டு பெற்ற தாய் சென் மெய்லின், பதறியடித்து கொண்டு ஓடிவந்தார். அதற்குள் தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்தனர்.. சாங்சென் - ஜாங் போ இருவரிடமும் விசாரணையை மேற்கொண்டனர். 2 பேருமே ஒரே மாதிரியான பொய்யை போலீசில் சொன்னார்கள், "நாங்க 2 பேரும் பெட்ரூமில் தூங்கி கொண்டிருந்தபோது, விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் தவறி ஜன்னலில் விழுந்துவிட்டன" என்றார்கள்..

ஆனால் குழந்தையின் தாய் சென் மெய்லின், இவர்களின் கட்டுக்கதையை நம்பவில்லை.. குழந்தைகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்லி, போலீசில் புகார் தந்தார்.. அதுமட்டுமல்லாமல், தன்னுடைய இறந்த குழந்தைகளுக்கு நியாயம் வேண்டும் என்று சோஷியல் மீடியாக்களிலும் கொந்தளித்தார்.. இதனால் இணையவாசிகள் பெருத்த ஆதரவை சென் மெய்லினுக்கு தந்தார்கள். போலீஸார் இது தொடர்பான விசாரணையை விரைவாக நடத்தி, 2 குழந்தைகளையும் கொன்றது ஜாங் போ - செங்சென் தம்பதிதான் என்பதை அப்பட்டமாக நிரூபித்தார்கள். இதனால், குழந்தைகளை அநியாயமாக கொண்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் என்று கேட்டு நாடு முழுவதும் போர்க்கொடியை உயர்த்தினார்கள்.. இதனால் பொதுசமூகமே கொந்தளிக்க துவங்கியது. கொண்டாட்டம்: இறுதியில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்..‘ ஆனால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 2 பேரும், அப்பீலுக்கு ஓடினார்கள்.. அங்கேயும் இவர்களது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே கருணை மனு தாக்கல் செய்து கெஞ்சினார்கள்.

ஆனாலும், பெற்றதாயின் கண்ணீருக்கு முன்பு, பொதுமக்களின் ஆவேசத்துக்கு முன்பு, சமூக ஊடகப் புரட்சிக்கு முன்பு, இந்த ஜோடிகளின் நாடகம் எடுபடவில்லை. நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த சீன அரசு, 2 குழந்தைகளையும் உயிரோடு கொன்ற குற்றவாளிகள் 2 பேருக்கும் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நேற்றைய தினம் அரங்கேற்றியது. 2 பேரும் உயிரிழந்தது, 2 குழந்தைகளின் மரணத்துக்கான நீதியாக கருதப்பட்டது. இந்த மரண தண்டனையை இதை அந்த நாடே கொண்டாடி தீர்த்து கொண்டிருக்கிறது.

Tags

Next Story