பறவைக் காய்ச்சலுக்கு சீனாவில் முதல் உயிரிழப்பு

பறவைக் காய்ச்சலுக்கு சீனாவில் முதல் உயிரிழப்பு
X
சீனாவில் பறவை காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்ததையடுத்து பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று வரை பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.

தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீனாவில் பறவை காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்தார்.

குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த பெண் நோய் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்பு ஒரு கோழிபண்ணைக்கு சென்றார் என்றும் அங்கு சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளில் பறவை காய்ச்சலுக்கு சாதகமான வைரஸ்கள் இருந்தது கண்டறியப்பட்டதாக தெரிகிறது. இது சீனாவில் பறவை காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும்.

2022ஆம் ஆண்டு மத்திய சீனாவில் 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்ட நிலையில் அதில் இருந்து சிறுவன் குணம் அடைந்தான். அதன் பின் அதே ஆண்டு மே மாதம் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் பாதிக்கப்பட்டான். அவனுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது.

இதற்கிடையே தான் 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து சீனாவில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil