பொதுமக்களில் ஒருவரை நாளை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக சீனா அறிவிப்பு

விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ள விண்வெளி வீரர்கள்.
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை சீனா முன்னெடுத்து வருகிறது. இதற்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்துவரும் சீனா, தற்போது பொதுமக்களில் ஒருவர் அடங்கிய குழுவை நாளை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுவரை சீன ராணுவத்தின் அங்கமான சீன விண்வெளி வீரர்கள் மட்டுமே அனுப்பப்பட்ட நிலையில், முதன்முறையாக ராணுவம் சாராத பொதுமக்களில் ஒருவரை சீனா விண்வெளிக்கு அனுப்புகிறது. இது தொடர்பாக சீன விண்வெளி ஏஜென்சி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில், பெய்ஜிங்கில் உள்ள ஏரோநாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசியராக உள்ள கையி ஹைச்சோ (Gui Haichao) அடங்கிய விண்வெளி குழுவினர் நாளை தியாங்காங் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu