/* */

சிங்கப்பூரில் இருந்து ஜப்பான் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

தொழில் முதலீடுகளை ?ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு இருந்து ஜப்பான் சென்றடைந்தார்.

HIGHLIGHTS

சிங்கப்பூரில் இருந்து ஜப்பான் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்
X

ஜப்பான் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

9 நாள் பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், முதலில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் முடிந்த நிலையில், தற்போது ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு தொழில் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்க முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து முதலில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர்.

சிங்கப்பூரில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசினார். அங்குள்ள ஆறு தொழில் நிறுவனங்களுடன் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளார்.

இந்நிலையில் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் முடிந்த நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டு தொழில் நிறுவனங்களுடன் அவர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்ய உள்ளார். ஜப்பான் வாழ் தமிழர்களையும் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். ஜப்பான் நாட்டில் மட்டும் ஆறு நாட்கள் சுறுப்பயணம் செய்து முடித்து விட்டு அதன் பின்னர் சென்னைக்கு திரும்ப உள்ளார்.

Updated On: 25 May 2023 3:56 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி