இங்கிலாந்து ராணி மறைவிற்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

இங்கிலாந்து ராணி மறைவிற்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
X

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இங்கிலாந்து ராணி மறைவிற்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


இங்கிலாந்து சாம்ராஜ்யத்தின் ராணி எலிசபெத் மறைவு செய்தி கேட்டு மிகவும் ஆழ்ந்த துக்கம் அடைந்தேன். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் சுமார் 70 ஆண்டு காலம் ராணியாக பதவி வகித்தவர் இரண்டாம் எலிசபெத். இவர் தனது ஆட்சி காலத்தில் 15 பிரதமர்களையும் பல முக்கிய அரசியல் திருப்பங்களையும் சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சிறப்புக்குரியவரின் மறைவின் மூலம் அவரது சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் அவரது நேர்மை மக்களுக்காக அவர் செய்த சேவைகளை நினைத்து பார்க்கிறேன். இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையின் குடும்பத்தினருக்கும், இங்கிலாந்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்