ரஷியாவுக்கு எதிரான போரை சமாளிக்க உக்ரைனுக்கு ராணுவ உதவி: கனடா அறிவிப்பு
கனடா நாடாளுமன்றத்தில் ஜெலன்ஸ்கி
உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றார்.
ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக கனடா சென்றுள்ள ஜெலன்ஸ்கி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவரது உரையில் கனடா அரசு வழங்கிய ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
மேலும் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததற்காக கனடா அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசுகையில், "நேட்டோ உள்ளிட்ட நமது கூட்டாளிகளுடன் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம். ரஷியாவுக்கு எதிரான போரை சமாளிக்க ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனை வழங்க உள்ளோம். உக்ரைன் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும்" என்று தெரிவித்தார்
ரஷ்யாவுக்கு எதிரான போரில் கனடா அளித்த உதவிக்காக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார், ஒட்டாவாவின் உதவி ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உதவியது என்று கூறினார்.
பிப்ரவரி 2022 ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பிற்கு மிகவும் குரல் கொடுக்கும் ஆதரவாளர்களில் கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு என ஜெலென்ஸ்கி தெரிவித்தார். இந்தப் போர் மற்றும் பயங்கரவாதத்திற்காக ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் கனடாவின் தலைமை உண்மையில் உங்கள் வழியைப் பின்பற்ற உலகில் உள்ள மற்றவர்களை ஊக்கப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu