ஒரே நாளில் 9,244 தொற்றுகளை பதிவு செய்தது கனடா

ஒரே நாளில் 9,244 தொற்றுகளை பதிவு செய்தது கனடா
X

கனடா புதிதாக 146,556 கோவிட் சோதனைகளைச் செய்துள்ளது, இதுவரை மொத்தம் 28,725,621 கோவிட் சோதனைகளைச் செய்துள்ளது.

கியூபெக் மற்றும் ஒன்ராறியோவில் கொரோனா வைரஸின் பாதிப்புகள் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இந்த மாகாணங்களில் மொத்த தொற்றுக்களை பொறுத்தவரை இவை முறையே 323,094 மற்றும் 378,339 ஆகவும் உள்ளது.கடந்த 14 நாட்களில் ஒன்ராறியோவில் மிக அதிகமான தொற்றுகள் பதிவாகி வருகிறது. இது ஒன்ராறியோவில் 40,100 ஆகவும் கியூபெகில் 16,709 ஆகவும் பதிவாகி உள்ளது. இது பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13,016 ஆக உள்ளது.

அதே வேளை மொத்த இறப்புகள் நேற்றைய நிலவரங்கள் படி ஒன்ராறியோவில் 7,512 ஆகவும் கியூபெக்கில் 10,726 ஆகவும் உள்ளது. கடந்த 14 நாட்களில் ஒன்ராறியோவில் 220 இறப்புக்களும் கியூபெக்கில் 89 இறப்புக்களும் பதிவாகியது.கனடாவில் நேற்று சனிக்கிழமை வரை 7,569,321 கொரோனா தடுப்பு மருந்துகளைப் ஏற்றப்படுள்ளது, மொத்த சனத்தொகையில் 17.862% விகிதம் பேர் குறைந்தது முதலாவது தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளனர். அவர்களில் 6,788,921 ஒரு தடுப்பு மருந்தை மட்டும் பெற்றுள்ளனர் மேலும் 780,400 பேர் இரண்டு தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளனர்.




கனடா அரசு வெளியிட்ட விபரங்கள் படி மேலும் 9,244 தொற்றுகள் பதிவாகி உள்ளது, இவற்றையும் சேர்த்து மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,045,278 ஆக உயர்ந்துள்ளது.தொற்றிலிருத்தி இதுவரை 954,017 பேர் மீண்டுள்ளார்கள்.

இறப்புகளைப் பொறுத்தவரை 23,251 பேர் இதுவரை இறந்துள்ளார்கள், இவர்களில் 40 பேர் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இறந்தவர்கள் என்று அரசு தரப்பில் அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags

Next Story