ரிஷி சுனக்கை அல் கொய்தாவுடன் ஒப்பிட்ட வானொலி நேயர்

ரிஷி சுனக்கை அல் கொய்தாவுடன் ஒப்பிட்ட வானொலி நேயர்
X

ரிஷி சுனக்

அவர் பிரிட்டிஷ் கூட இல்லை. அவர் இங்கிலாந்தை நேசிப்பதில்லை என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தற்போதைய நிலையில் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகி விட்டது.

இந்நிலையில், பிரிட்டனின் பிரபலமான LBC வானொலி நிகழ்ச்சியில் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர் மற்றும் போரிஸ் ஜான்சனின் ஆதரவாளர் என்று கூறிக்கொண்ட ஜெர்ரி என்ற நேயர், நிகழ்ச்சியின் போது ரிஷி சுனக் பிரிட்டிஷ்காரர் இல்லை என்று கூறி அவரை அல் கொய்தாவுடன் ஒப்பிட்டார்.

புதிய இங்கிலாந்து பிரதமராக ஏறக்குறைய உறுதியாகத் தெரிகிற ரிஷி சுனக், இங்கிலாந்தை நேசிக்கவில்லை என்றும், பெரும்பாலான மக்களின் கருத்தில் அவர் பிரிட்டிஷ்காரர் கூட இல்லை என்றும் கூறினார்..

"நாங்கள் வாக்காளர்கள், நாங்கள் போரிஸை ஆதரிக்கிறோம். அடுத்த முறை பொதுத் தேர்தலில் போரிஸ் வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது. ரிஷி அதில் வெற்றி பெறமாட்டார். போரிஸைப் போல இங்கிலாந்தை அவர் நேசிப்பதில்லை," என்றும் கூறினார்..

இதற்கு பதிலளித்த நிகழ்ச்சி தொகுப்பாளர், ரிஷி சுனக் இங்கிலாந்தில் பிறந்து அந்நாட்டின் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் படித்தவர் என்றும், ஜான்சன் நியூயார்க்கில் பிறந்தவர் என்றும் சுட்டிக்காட்டிய பிறகு, ஜெர்ரி கூறுகையில், ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தியின் வணிகம் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தான் உள்ளது. பிரிட்டனில் இல்லை என்று கூறினார்

அது மட்டுமல்லாம, கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர் என்று கூறிக்கொள்ளும் ஜெர்ரி, அல்கொய்தாவில் பாதி பேர் பிரிட்டிஷ் குடிமக்கள் என்றும் கூறினார்

"நான் பாகிஸ்தானிலோ அல்லது சவுதி அரேபியாவிலோ பிரதமராக வருவதைவர முடியும் என்று நீங்கள் குறிப்பிட முடியுமா? முடியாது.. இங்கிலாந்தில் எண்பத்தைந்து சதவீதம் பேர் வெள்ளையர்களான ஆங்கிலேயர்கள், அவர்கள் அதை பிரதிபலிக்கும் ஒரு பிரதமரை விரும்புகிறார்கள். நான் இந்தியாவுக்குச் சென்று பிரதமராக முடியாது. என்று அவர் மேலும் கூறினார். ரிஷி சுனக் தனது தேசபக்தியை நிரூபிக்க எதுவும் செய்ய முடியாது.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி தொகுப்பாளர், "நீங்கள் அடிப்படையில் ஒரு இனவாதி என்று நான் நினைக்கிறேன், நீங்களும் மற்ற டோரி கட்சி உறுப்பினர்களும் இப்படி நினைப்பது முற்றிலும் தவறானது என்று கூறி தொடர்பை துண்டித்து விட்டார்.பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ரிஷி சுனக் ஒரு படி நெருக்கமாக இருக்கிறார்.

42 வயதான ரிஷி சுனக், தனது வேட்புமனுவை அறிவித்தபோது, "எங்கள் பொருளாதாரத்தை சரிசெய்யவும், எங்கள் கட்சியை ஒன்றிணைக்கவும், நம் நாட்டிற்கு வழங்கவும்" விரும்புவதாகக் கூறினார், போட்டியின் அவருக்கு 100-எம்.பி.க்கள் ஆதரவை எளிதாகத் தாண்டி ஒரு திடமான முன்னிலை வகிக்கிறார்

Tags

Next Story
சங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்  முடிந்து இதை மட்டு பண்ணுங்க..!