பங்களாதேஷில் 15 பேர் பலி - 400 பேர் மாயம்

பங்களாதேஷில் அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளதாக யு.என் அகதிகள் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இது மிகப்பெரிய பேரழிவு தரும் செய்தி என்று யு.என்.எச்.சி.ஆரின் ஜோகன்னஸ் வான் டெர் கிளாவ் கூறினார்,இன்னும் 400 பேர் கணக்கிடப்படவில்லை, ஒருவேளை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம், என்று அவர் கூறினார்.

மேலும் யு.என்.எச்.சி.ஆரில் 560 பேர் காயமடைந்ததாகவும் 45,000 பேர் இடம்பெயர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!