/* */

அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா..! புலம்பெயர் மக்கள் எண்ணிக்கையை குறைக்க அதிரடி!

புலம்பெயர் மக்கள் எண்ணிக்கையை குறைக்க அதிரடி நடவடிக்கை எனும் பெயரில் அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா..!

HIGHLIGHTS

அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா..! புலம்பெயர் மக்கள் எண்ணிக்கையை குறைக்க அதிரடி!
X

ஆஸ்திரேலியா, சர்வதேச மாணவர்களுக்கான விசா மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என்று அவுஸ்திரேலிய நிர்வாகம் நம்புகிறது.

புதிய கொள்கைகளின் அடிப்படையில், சர்வதேச மாணவர்கள் இனி ஆங்கில மொழித் தேர்வில் அதிக மதிப்பீடுகளைப் பெற வேண்டும். அத்துடன், நீண்ட காலம் அவர்கள் தங்குவதை தடுக்கும் வகையில், மாணவர்களின் இரண்டாவது விசா விண்ணப்பத்தின் போது அதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்.

இதனிடையே, உள்விவகார அமைச்சர் கிளார் ஓ நெய்ல் தெரிவிக்கையில், தங்களின் புதிய கொள்கையானது புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவுகள் ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் கருதி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கிளார் ஓ நெய்ல் தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரதமர் அந்தோணி அல்பானிஸ்தெரிவிக்கையில், நாட்டின் புலம்பெயர் மக்களுக்கான கொள்கைகள் மொத்தமாக பாதிப்படைந்துள்ளதாகவும், ஆஸ்திரேலியாவின் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை நிலையான நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் கிளார் ஓ நெய்ல் தெரிவிக்கையில், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்படும் சரிவானது அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் சீர்திருத்தங்களுக்கு மேலும் பயனளிக்கும் என்றார்.

புலம்பெயர் மக்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த திடீர் கொள்கை மாற்றம் என்பது, 2022-23ல் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை 510,000 என அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகர புலம்பெயர் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது சர்வதேச மாணவர்களால் ஏற்பட்டுள்ளது என்றே அமைச்சர் கிளார் ஓ நெய்ல் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் ஆஸ்திரேலியா புலம்பெயர் மக்கள் தொடர்பில் கொள்கைகளை தளர்த்தியது.

ஆனால் தற்போது அந்த முடிவு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலியா கண்டறிந்துள்ளது. நாட்டில் வீடற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், வாடகை கட்டணமும் கடுமையாக உள்ளது.

அவுஸ்திரேலிய மக்களில் 62 சதவீதம் பேர்கள் தெரிவிக்கையில், புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது என்றே குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் மிகவும் திறமையான தொழிலாளர்களுக்கு ஆஸ்திரேலியா நிர்வாகம் சிக்கலின்றி visa அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய கொள்கைகளின் தாக்கம்

புதிய கொள்கைகளின் தாக்கம் குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இந்த கொள்கைகள் ஆஸ்திரேலிய பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கருதுகின்றனர். ஏனெனில், சர்வதேச மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இருப்பினும், சிலர் இந்த கொள்கைகள் ஆஸ்திரேலிய சமூக அமைப்பை மேம்படுத்தும் என்று கருதுகின்றனர். ஏனெனில், புலம்பெயர் மக்கள் அதிகரிப்பால், நாட்டில் வீடற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததுடன், வாடகை கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த கொள்கைகளின் இறுதி தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Updated On: 11 Dec 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்