மருத்துவமனைகள் மீது தாக்குதல் ரஷ்யாவின் மிருகத்தனம் - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி

மருத்துவமனைகள் மீது தாக்குதல் ரஷ்யாவின் மிருகத்தனம் - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி
X

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி

உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா போரிட்டு வருவது இனப்படுகொலை, மிருகத்தனமான செயல் -உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றச்சாட்டு.

உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளை ரஷ்ய படைகள் தாக்கியது மிருகத்தனமான செயல். இனப்படுகொலை என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியதாவது , உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா போரிட்டு வருவது இனப்படுகொலை. உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளை ரஷ்ய படைகள் தாக்கியது மிருகத்தனமான செயல். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷ்யா கூறியிருப்பது அப்பட்டமான பொய், மின்நிலையங்கள், மருத்துவமனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்க்கான வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story