இன்று உலக சுகாதார தினம்
நோய் தடுப்பிலும், வருமுன் காப்பதிலும் விழிப்புணர்வுகளை மேற்கொள்வதோடு நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்து, அவர்களை பராமரிப்பதையும் குறிக்கோளாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம்தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலக மக்களின் சுகாதார நலன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான உலக சுகாதார அமைப்பானது 1948ல் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு அனைத்துலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணியை செய்யும் அதிகாரம் படைத்தது.
1950ம் ஆண்டு முதல் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்க உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உலக சுகாதார தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மாசு, இயற்கை பேரழிவு, இயந்திரமயம், நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், பட்டினி போன்ற பல்வேறு காரணிகள் மக்களின் சுகாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் பெரும் சவாலாக உள்ளன.இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் `36 ஆண்டுகளில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரிப்பு' உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 11 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது. 1980ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2014இல் 4 மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கும் உலக சுகாதார நிறுவனம் 2014இல் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 422 மில்லியன் எனவும் தெரிவித்துள்ளது.வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள மக்கள் நீரிழிவு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை இந்த நோய் காரணமாக 2012இல் 15 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஊடகக் கடமையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu