நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி
கோப்புப்படம்
நேபாளத்தில் ரிக்டரில் 6.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தில், ருகும் மேற்கு பகுதியில் 36 பேரும், ஜஜர்கோட் பகுதியில் 34 பேரும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நிலநடுக்க பாதிப்பு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலநடுக்கம், டெல்லி-என்.சி.ஆர்., உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வடஇந்திய பகுதிகளிலும் உணரப்பட்டது. நேபாள நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4.38 மணியளவில் நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது ரிக்டரில் 3.6 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் காத்மண்டு நகரில் இருந்து வடமேற்கே 169 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டராக பதிவாகி உள்ளது.
அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் அயோத்திக்கு வடக்கே 215 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu