இந்துக்கள் இல்லாத வங்கதேசம் உருவாக்க முயற்சியா? என்ன செய்ய போகிறது இந்தியா?

இந்துக்கள் இல்லாத  வங்கதேசம் உருவாக்க முயற்சியா? என்ன செய்ய போகிறது இந்தியா?
X

வர்த்தக நிறுவனங்களுக்கு தீ வைத்து சூறையாடும் கலவரக்காரர்கள்.

இந்துக்கள் இல்லாத வங்கதேசம் உருவாக்க முயற்சியை தடுத்து நிறுத்த என்ன செய்ய போகிறது இந்தியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறை நடப்பதால் இந்தியா என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

நமது அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் திடீர் கலவரம் ஏற்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தற்போது இடைக்கால அதிபராக முகமது யூனுஸ் பதவியேற்று உள்ளார். வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நட்புறவு பாராட்டி வந்தார் ஆனால் அங்கு 1971 ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாக்கப்பட்ட போது நடந்த சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 30% இட ஒதுக்கீடு நீண்ட காலமாக இருந்து வந்தது.


இந்த வேலை வாய்ப்பு சலுகை கோர்ட் உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்டு இருந்தது.ஷேக் ஹசீனா பிரதமர் ஆனதும் மீண்டும் அதனை அமல்படுத்தினார். இதற்கு எதிராக அந்நாட்டில் பெரிய கலவரம் வெடித்தது. மாணவர்கள் ஒன்று திரண்டு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் எங்கு பார்த்தாலும் வன்முறை நடந்தது. இதனை தொடர்ந்து கோர்ட்டில் நடந்த வழக்கில் இட ஒதுக்கீடு 5% மட்டும் வழங்கலாம் என தீர்ப்பளித்தது.

இந்த சூழலில் ஏற்கனவே நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு மாணவர்கள் மீண்டும் கடந்த வாரம் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் மீண்டும் வன்முறையில் முடிந்தது. போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிக்காரர்கள் ஒன்று திரண்டு பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என கட்டாயப்படுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.


இதன் காரணமாக பிரதமர் ராணுவ விமானம் மூலம் இந்தியாவில் தஞ்சம் புகுந்து உள்ளார். போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் வீட்டை அடித்து நொறுக்கினார்கள் .ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் அவர் லண்டன் செல்வாரா, அமெரிக்கா செல்வாரா என்று இன்னும் முடிவாகவில்லை.

இந்த சூழலில் வங்கதேசத்தில் இன்னும் கலவரம் ஓய்ந்த பாடு இல்லை .அங்கு பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். இந்துக்கள் எட்டு சதவீதம் பேர் உள்ளனர். போராட்டக்காரர்களும், மாணவர்கள் அமைப்பினரும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் இந்துக்களின் சொத்துக்களை குறி வைத்து தாக்குகிறார்கள். இந்துக்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள் ,வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன.

இதன் காரணமாக இந்துக்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்துக்களின் கடைகள் வர்த்தக மையங்கள் வீடுகள் கோயில்கள் திட்டமிட்டு ரீதியில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. இந்துக்களின் வீடுகளும் வர்த்தக மையங்களும் துப்பாக்கி முனையில் அடித்து நொறுக்கப்பட்டு, இந்துக்களின் நகைகள்,பணம்,வீட்டு உபயோக பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இந்துக்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன.

இந்து பெண்களும் சிறுமிகளும் போராட்டக்காரர்களால் கடத்திச் செல்லப்பட்டு அவர்களை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. நம்முடைய அண்டை நாடுகளில் முஸ்லிம் தேசங்களாக இருக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மூன்றுமே ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்தவை தான், இப்போது அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் என ஆகிவிட்டன.


இந்த நாடுகளில் முஸ்லிம்களோடு இந்துக்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் கலந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட இந்துக்களே இல்லை என்றாகிவிட்டது. பாகிஸ்தானில் சில லட்சம் இந்துக்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர். வங்கதேசத்தில் மட்டும் சுமார் இரண்டரை கோடிக்கு அதிகமான இந்துக்கள் வசிக்கின்றனர். அந்த இந்துக்களை குறி வைத்து இப்போது அங்கே நடந்து வரும் திட்டமிட்டு ரீதியான வன்முறையை தடுக்க வேண்டிய ராணுவமும் போலீசும் போராட்டக்காரர்களின் நன்மதிப்பை பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

வங்கதேசத்தில் தொடரும் வன்முறைகளால் இந்துக்கள் இல்லாத வங்கதேசம் என்ற ஒரு நிலை உருவாகி விடுமோ என்று அங்குள்ள இந்து அமைப்புகள் அஞ்சுகின்றன. இப்படி ஒரு சூழ்நிலை உருவானால் அது இந்தியாவுக்கு தான் பேரிடராக முடியும். வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் என்பது நம்முடைய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையும் கூட. அதனால் இந்தியா உடனடியாக தலையிட்டு நம்மையும் நம்முடைய வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று வங்கதேச இந்துக்கள் எதிர்பார்க்கின்றன.

வெறுமனை நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் தொடர்பில் உள்ள வங்கதேச அரசியல் கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்காமல் இந்தியா நேரடியாக தலையிட வேண்டும் .வங்கதேசத்தில் தாக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவாக ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அமெரிக்கா உட்பட உலக நாடுகளை ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க செய்ய வேண்டும். உலக அரங்கில் நாம் தனித்து விடப்படுவோம் என்ற அச்சத்தை வங்கதேசத்தில் குறிப்பாக அங்கு இனி ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த கடமையிலிருந்து இந்தியா நழுவி விடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!