கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்

அமெரிக்க எஃப்-16 (F-16) ரக போர் விமானம் - கோப்புப்படம்
தென் கொரியாவின் மேற்குப் பகுதியில் அமெரிக்க எஃப்-16 (F-16) ரக போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. விமானம் கடலில் விழுகும் முன் விமானி வெளியேறி உயிர் தப்பினார்.
குன்சன் விமானத் தளத்தின் எட்டாவது போர் விமானப் பிரிவைச் சேர்ந்த இந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மஞ்சள் கடலில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது என எட்டாவது போர் விமானப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, விமானத்திலிருந்து வெளியேறிய விமானியை விபத்து நடந்து ஒரு மணிநேரத்திற்குள் பாதுகாப்பாக மீட்டனர்.
இதுகுறித்து பேசிய எட்டாம் போர் விமானப் பிரிவின் தலைமை அதிகாரி மேத்யூ சி. கேட்கே, 'எங்களது விமானியை விரைவாக கண்டுபிடிக்க உதவிய கொரிய குடியரசின் மீட்புப் படையினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனி விபத்துக்குள்ளான விமானத்தை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.' எனக் கூறினார்.
கடந்த ஒரு வருடத்தில் இதுவரை மொத்தம் 3 எஃப்-16 ரக விமானங்கள் தென்கொரியாவில் விழுந்து சிதறியுள்ளன. இதுவரை எந்த உயிரிழப்புகளும் நடக்கவில்லை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu