அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் குழுவினருடன் இன்று மாலை விண்வெளி பயணம்
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்
அமேசான் நிறுவனர் பெசோஸ் தனது குழுவினருடன் இன்று மாலை 6:30 மணிக்கு விண்வெளி பயணம் வளிமண்டல எல்லைக்கோடான கார்மன் கோட்டை கடந்து 6 கி.மீ தொலைவு வரை பயணிக்கவுள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் குழுவினர் நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் இன்று விண்வெளிக்கு செல்கின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் சமீபத்தில், யூனிட்டி 22 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனரும் ப்ளூ ஆர்ஜின் நிறுவன நிறுவனருமான ஜெப் பெசோஸ் இன்று தனது குழுவினருடன் விண்வெளிக்கு பயணிக்கிறார். மேற்கு டெக்சாசில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நியூ ஷெப்பட் விண்கலம் புறப்படுகின்றது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நியூ ஷெப்பட் விண்ணை நோக்கி புறப்படுகின்றது.
ஜெப் பெசோஸ் உடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், முதல் பெண் விமான பயிற்சியாளரான 82 வயது மூதாட்டி வேலி பங்க், 18 வயது இளைஞர் அலீவர் டேன் ஆகியோர் செல்கின்றனர். இந்த விண்வெளி பயணத்தின் மொத்த நேரம் 10 நிமிடங்கள். நியூ ஷெப்பட் விண்கலம் மூலம் 100 கி.மீ. உயரத்தில் உள்ள புவியின் வளிமண்டல எல்லைக்கோடான கார்மன் கோட்டை தாண்டி 6 கி.மீ. தூரம் குழு பயணிக்கும். அங்கிருந்து பூமி மற்றும் அடர் கருப்பான விண்வெளியை ரசித்த பின்னர் பூமிக்கு திரும்புவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu