/* */

டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்

டென்மார்க்கில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மே 18ல் வீர வணக்க நாள் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

HIGHLIGHTS

டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்
X

விடுதலைபுலிகள் இயக்க தலைவர் பிரபாகரன்.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை அவரது சகோதரரான மனோகர் உறுதி செய்துள்ளார். அதோடு பிரபாகரன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18 ம் தேதி அவருக்கு டென்மார்க்கில் வீரவணக்கம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று பல்வேறு தரப்பினர் கூறி வரும் நிலையில் இத்தகைய மோசடிகளை தடுக்கவே வீரவணக்கம் நிகழ்ச்சி நடத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்தவர் பிரபாகரன். இலங்கையில் தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடினார். இலங்கை அரசுக்கு எதிராக தனியாக படையை உருவாக்கி செயல்பட்டு வந்தார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது.

2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கைவிட்டது. அதோடு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அந்த இயக்கமே அழிக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதாவது 2009 மே மாதம் 18 ம் தேதி பிரபாகரன் மரணடைந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்தது. அதோடு பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரனும் மரணமடைந்தனர். இதில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட போட்டோக்கள் வெளியாகி இருந்தன.

ஆனாலும் கூட தொடர்ந்து பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் மரணிக்கவில்லை. வெளிநாடுகளில் அவர்கள் உயிர் வாழ்கின்றனர் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட பழ நெடுமாறன் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரபாகரன் 2009ல் இலங்கை இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததாக கூறினாலும் கூட அவருக்கு நினைவஞ்சலி, வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் நடத்தப்படவில்லை.

பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாலேயே இது நடத்தப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் தான் முதல் முதலாக பிரபாகரன் குடும்பத்தில் இருந்து அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் வீரவணக்க நினைவு கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரபாகரனின் அண்ணன் மனோகர் டென்மார்க்கில் உள்ளார். அவர் தான் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்துக்கு வீரவணக்கம் நினைவு கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: ‛‛வரும் மே 18 ம்தேதி என் தம்பி பிரபாகரன், மைத்துனி மதிவதனி, குழந்தைகள் துவாரகா, பாலச்சந்திரன் உள்ளிட்டோருக்கு வீரவணக்கம் நினைவு கூட்டம் நடத்த உள்ளேன். டென்மார்க்கில் நான் இருக்கும் இடத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. எனது தம்பியும், அவரது குடும்பமும் இலங்கை இறுதி யுத்தத்தில் தங்களின் மண்ணுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர்.

ஆனால் பிரபாகரன் பெயரை பயன்படுத்தி இப்போது மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோசடி கும்பலை இனம்கண்டு பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும். பிரபாகரனின் வீரவணக்கம் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்'' என கூறியுள்ளார். இந்த வீரவணக்கம் கூட்டம் என்பது பிரபாகரன் இறந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்த மே 18 ம் தேதியிலேயே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 May 2024 12:25 PM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...