ஆவிகளை விரட்டுவதற்காக ஜப்பானில் நடந்த பாரம்பரிய வினோத திருவிழா

ஜப்பானில் ஆவிகளை விரட்டுவதற்காக நடந்த திருவிழா.
ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நிர்வாண திருவிழா நடக்கும் நிலையில், இந்தாண்டு முதல்முறையாக அதில் பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு நாட்டிலும் பல வினோத பழக்கங்கள் இருக்கும். அப்படி ஜப்பானில் இருக்கும் ரொம்பவே வினோதமான பழக்கம் தான் தான் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் நிர்வாண திருவிழா.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பாரம்பரிய சடங்கில் பங்கேற்பதன் மூலம் தீய சக்தி விரட்டப்படும் என்பது நம்பிக்கையாகும்
இதற்கிடையே ஜப்பானின் இந்த நிர்வாண திருவிழாவில் முதன்முறையாகப் பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த 1,250 ஆண்டுக் கால பழமையான நிகழ்வில் பெண்கள் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்த விழாவில் ஒரு பெரிய மூங்கிலை எடுத்துக் கொண்டு பெண்கள் உற்சாகமாகக் கோஷமிட்டும் போட்டோ வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த திருவிழாவில் நடத்தப்படும் பூஜைகள் மூலம் தீய ஆவிகள் விரட்டப்படும் என்று நம்பப்படுகிறது. இந்த பழமையான சடங்கில் பெண்கள் ஏழு குழுக்களாகப் பங்கேற்றனர்.. இதில் கலந்து கொண்ட பெண்கள் தீய ஆவிகளை விரட்ட வேண்டும் என்பதற்காகப் பிரார்த்தனையும் செய்தனர். என்ன தான் இதன் பெயர் நிர்வாண திருவிழா என்று இருந்தாலும் இதில் கலந்து கொள்பவர்கள் நிர்வாணமாக இதில் பங்கேற்க மாட்டார்கள். பெண்கள்: இதில் கலந்து கொண்ட பெண்கள் பலரும் "ஹாப்பி கோட்ஸ்" எனப்படும் இடுப்பு வரை இருக்கும் பாரம்பரியமான ஆடையை அணிந்து இதில் கலந்து கொண்டனர். மறுபுறம் இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் சுமோ மல்யுத்த வீரர்கள் அணிவதைப் போல இடுப்பில் மட்டும் இருக்கும் துணிகளை அணிந்து இருந்தனர்.
இது குறித்து இந்த நிகழ்வில் பங்கேற்ற ஆண்கள், "இந்த நிகழ்வில் பெண்கள் பங்கேற்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது நல்லது தான்.. இதில் பாலின ரீதியாகப் பாகுபாடு இருக்கக் கூடாது" என்றார். அதேபோல இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் சாமியார் நருஹிட்டோ சுனோடா கூறுகையில், "இந்த நிகழ்வில் கலந்து கொள்ளப் பெண்களுக்கு எப்போதும் தடை இருந்ததில்லை. இதற்கு முன்பும் கூட ஒரு சில பெண்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தச் சூழலில் தான் கடந்த ஆண்டு எங்களைத் தொடர்பு கொண்ட பெண்கள் குழு இதில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டனர். நாங்களும் ஓகே சொல்லிவிட்டோம். இதில் அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு வேடிக்கையான விழாவாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அனைத்து தரப்பினரும் வந்தால் கடவுள் சந்தோசமடையவே போகிறார் என்றார்.
அதேநேரம் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வில் பெண்கள் கலந்து கொள்ளவில்லை. அதாவது இதன் முக்கிய நிகழ்வில் தீய சக்திகளை விரட்ட ஆண்கள் பலர் ஒரே இடத்தில் இருந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள். இதன் மூலம் அங்குள்ள தீய சக்தி விரட்டப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை. இந்த குறிப்பிட்ட நிகழ்வில் பெண்கள் கலந்து கொள்ளவில்லை. இதற்கு அனுமதி தருவது கஷ்டம் தான் என்று அந்த கோயில் பூசாரி தெரிவித்தார். கடைசி முறை? ஜப்பானில் நிர்வாண திருவிழா நடத்துவது இதுவே கடைசி முறை என்றும் கூறப்படுகிறது. பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வது கடினம் என்பதால் இந்த நிகழ்வை இந்தாண்டு உடன் முடித்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu