இந்தோனேஷியாவில் 87 கல்யாணம் செய்த விவசாயி... அப்பப்பா.. அட்ராசக்கை.. அட்ராசக்கை…

இந்தோனேஷியாவில் 87 கல்யாணம் செய்த விவசாயி... அப்பப்பா.. அட்ராசக்கை.. அட்ராசக்கை…
X

87 திருமணம் செய்த விவசாயி கான்.

இந்தோனேஷியாவை சேர்ந்த விவசாயி ஒருவர் 87 திருமணம் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில் 88 ஆவது திருமணத்துக்கு தயாராகி வருவதாக அறிவித்துள்ளார்.

வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு எப்படி ஒரு முறையோ அப்படியே திருமணமும் ஒருமுறைதான் என்ற நிலையே கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. ஆனால், அந்த நிலை மாறி திருமணமான தம்பதிக்குள் இல்லற வாழ்க்கையில் சில ஆண்டுகளிலேயே கசப்பு ஏற்பட்டு ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டால் அவர்கள் மணமுறிவு பெற்றுக் கொண்டு தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை தொடங்கும் நிலையை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இருந்தபோதிலும், நமது நாட்டில் திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. அதுவும் தாலி செண்டிமென்ட் எப்போதும் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது என்பதே உண்மை.

காலப்போக்கில் தாலி இல்லாத திருமணம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அதுமட்டுமின்றி திருமணம் செய்து கொள்ளாமலே இணைந்து வாழும் வாழ்க்கை முறையும் நம் நாட்டில் தற்போதும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையும் மாறி திருணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையை தொடங்கியவர்களுக்குள் சில காலத்துக்குள் பிரிவு ஏற்பட்டால், தங்களுக்கு வேறு இணையை தேடிக் கொண்டு வாழ்க்கையை தொடருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க ஆண் ஒருவர் சில பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார், பெண் ஒருவர் சில ஆண்களை மயக்கி திருணம் செய்து கொண்டார் என்ற செய்திகள் சமீப காலமாக அதிகளவு பேசப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் உச்சபட்சமாக 61 வயது விவசாயி ஒருவர் இதுவரை 87 திருமணம் செய்துக் கொண்டு தற்போது 88 ஆவது திருமணத்துக்கு தயாராகி வருகிறார் என்பதுதான் ஹாட் டாபிக்.

ஆனால், அந்த நிகழ்வு இந்தியாவில் அல்ல, இந்தோனேஷியாவில்தான். அந்த காதல் மன்னனின் பெயர் காதர். 61 வயதான இவர் தற்போது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார். நெட்டிசன்கள் அவருக்கு பிளேபாய் கிங் என பெயரிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

88 ஆவது முறையாக திருமணம் செய்ய உள்ள கான் தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள விவரம் வருமாறு:

இந்தோனேஷியா நாட்டின் ஜாவா மாகாணத்தில் உள்ள மஜலெங்கா கிராமத்தைச் சேர்ந்த நான், 14 ஆவது வயதில் முதலாவது திருமணத்தை செய்து கொண்டேன். அப்போது அந்த பெண்ணிற்கு என்னை விட இரண்டு வயது அதிகம். அந்த பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் இரண்டு ஆண்டுகளில் எங்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டு விட்டது.

இதனால் மற்றொரு பெண்ணை திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டது. அதுவும் சில காலங்களில் கசந்துவிட அந்த பெண்ணையும் விவாகரத்து செய்துவிட்டேன். அதன் பிறகு திருமணம் சில காலங்களில் விவாகரத்து என்று பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில நேரங்களில் பெண்களை மயக்க வசியம் செய்ய வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

இதுவரை 87 திருமணம் முடிந்து தற்போது 88 ஆவது திருமணம் செய்ய உள்ளேன். எனது 86 ஆவது மனைவி உடன் இரண்டு மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்தேன். அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டோம். இருந்தாலும் அவரே மீண்டும் என்னை திருமணம் செய்ய விரும்புகிறார். அதன் படி அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளேன் என தனது அனுபவங்களை கான் இணையளம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு