கதவை தட்டிய சிறுவனை துப்பாக்கியால் சுட்ட முதியவர்

கதவை தட்டிய சிறுவனை துப்பாக்கியால் சுட்ட முதியவர்
X

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரால்ப் யார்ல்.

US man shoots teenager-அமெரிக்காவில் பல மாகாணங்களில் துப்பாக்கிச்சூடு உயிரிழப்புகள் மற்றும் நிற வெறி தாக்குதல்கள் தற்போது சர்வசாதாரணமான முறையில் நிகழ்ந்து வருகிறது.

அமெரிக்காவில் பல மாகாணங்களில் துப்பாக்கிச்சூடு உயிரிழப்புகள் மற்றும் நிற வெறி தாக்குதல்கள் தற்போது சர்வசாதாரணமான முறையில் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் கனாஸ் சிட்டி பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

கறுப்பினத்தவரான ரால்ப் யார்ல் என்ற 16 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமையன்று தனது நண்பரை பார்க்க பக்கத்து ஏரியாவுக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு சொல்லும் போது விலாசம் மாறி வேறு ஒரு வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்தி அழைத்துள்ளார். இதனால் கடுப்பான ஆன்ட்ரூ என்ற முதியவர் தன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவன் ரால்பை சுட்டுள்ளார்.

இதில் சிறுவன் ரால்ப்பின் தலை மற்றும் கை பகுதிகளில் குண்டு பாய்ந்துள்ளது. அந்த சிறுவன் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பிழைத்தார். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய முதியவரை காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்று 24 மணிநேரத்தில் விடுவித்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கறுப்பின மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business