பைடனுக்கு சந்தனப் பெட்டி, அவரது மனைவிக்கு வைரக்கல்: மோடி வழங்கிய பரிசுகள்

பைடனுக்கு சந்தனப் பெட்டி, அவரது மனைவிக்கு வைரக்கல்: மோடி வழங்கிய பரிசுகள்
X
அமெரிக்காவிற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பல பரிசுகளை வழங்கினார்

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அமெரிக்க பயணம், இந்திய – அமெரிக்க உறவில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இதற்குமுன் அதிகாரப்பூர்வமாக நான்கு முறை மோடி அமெரிக்கா சென்றிருந்தாலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரை உபசரிக்க இருப்பது இதுதான் முதல்முறை.

மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். 2016ஆம் ஆண்டு ஒருமுறை அங்கு உரையாற்றியதால், அமெரிக்க நாடளுமன்றத்தில் இரண்டுமுறை உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் ஆகவிருக்கிறார் மோடி.

மோடி பரிசளித்த சந்தனப் பெட்டியும், வைரக் கல்லும்

அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்துகொள்வதற்காகச் சென்ற மோடியை ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் வரவேற்றனர்.

அப்போது பிரதமர் மோடி அவர்களுக்கு சில பரிசுகளை வழங்கினார். ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டியையும், உபநிஷத புத்தகங்களையும் வழங்கிய பிரதமர்., ஜில் பைடனுக்கு வைரக்கல் ஒன்றையும் பரிசளித்தார்.


ஜோ பைடனுக்கு வழங்கப்பட்ட சந்தனப் பெட்டி, நுணுக்கமான வேலைபாடுகளைக் கொண்டடதாகும். அதனுள் வெள்ளியிலான ஒரு விநாயகர் சிலையும், வெள்ளி விளக்கும் இருந்தன.

மேலும் அந்த சந்தனப்பெட்டிக்குள் ‘தஸ் தனம்’ என்ற பரிசும் இருந்தது. இது ஒருவர் 80 வயதை பூர்த்தி செய்யும்போது வழங்கப்படும் பரிசுப்பொருள் ஆகும். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகின்ற நவம்பர் மாதம் தனது 81வது வயதை அடைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஜோ பைடனுக்கு வழங்கப்பட்ட சந்தனப் பேழைக்குள், உபநிஷத கொள்கைகளின் 10 கோட்பாடுகள் அடங்கிய நூலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்ட வைரக்கல்லை, பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.


பிரதமர் மோடியிடம் இருந்து பரிசுகளை பெற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவருக்கு பதில் பரிசுகளை வழங்கினார்.

பழமையான கையெழுத்துப் பிரதிகளை கொண்ட ‘கேலி’ எனப்படும் புத்தகங்களை ஜோ பைடன் மோடிக்கு வழங்கினார். அதனுடன் ஒரு பழமையான கேமராவையும், வனவிலங்குகள் தொடர்பான புத்தகம் ஒன்றையும் தனது கையெழுத்துடன் அவர் மோடிக்கு பரிசளித்தார்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !