காத்மாண்டுவில் இன்று காலை நிலநடுக்கம்
X
கோப்புப்படம்
By - C.Vaidyanathan, Sub Editor |11 Jun 2022 9:28 AM IST
தலைநகரில் இருந்து கிழக்கே 15 கிமீ தொலைவில் உள்ள பக்தபூர் மாவட்டத்தில் அதிகாலை நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று அதிகாலை 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து வெளியே ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், தலைநகரில் இருந்து கிழக்கே 15 கிமீ தொலைவில் உள்ள பக்தபூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
காத்மாண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. உயிர் அல்லது உடைமை சேதம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
2015 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தை இது நினைவூட்டுவதாக பலர் தெரிவித்தனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu