46 பேர் உடல் கருகி உயிரிழந்த சிலி நாட்டின் காட்டுத்தீ

46 பேர் உடல் கருகி உயிரிழந்த சிலி நாட்டின் காட்டுத்தீ
X

சிலி நாட்டில் காட்டுத்தீயுடன் வீடுகளும் பற்றி எரியும் காட்சி.

46 பேர் உடல் கருகி உயிரிழந்த சிலி நாட்டின் காட்டுத்தீ

தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் ஏற்பட்டு இருக்கும் காட்டித் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்து உள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியின் மத்திய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென அதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது. காட்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் சூழலில், இந்த தீ விபத்தால் அங்கு உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மேல் தீ பற்றி எரிந்தது. காட்டுத் தீ தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது . சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடன் நீர் கொண்டு வரப்பட்டு, வனத்தின் மேல் பகுதியில் இருந்து நீர் ஊற்றப்பட்டு தீ அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திடீரென ஏற்பட்ட இந்த பெரும் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை. மீட்புப் பணிகளுக்கு மத்தியில் இது தொடர்பான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றின் வேகம் காரணமாக மரக்கிளைகளுக்கு இடையிலான உராய்வுகளே இந்த காட்டுத் தீ ஏற்படுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. தீ பரவும் வாய்ப்பு இருக்கும் இடங்களில் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக 158 இடங்களில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீ காரணமாக 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப் பகுதிகள் எரிந்து நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் முதலில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்து உள்ளது.

சிலி நாட்டின் கடற்கரை நகரங்களை இந்த காட்டு தீயின் காரணமாக சாம்பல் புகை சூழ்ந்து உள்ளது. இந்த புகை அடர்ந்த மூடுபனி போல காணப்படுகிறது. குறிப்பாக மத்திய பகுதியான வினா டெல் மார் மற்றும் வால்பரைசோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை வெளியேறி உள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business