நடுக்கடலில் மூழ்கிய படகு! 39 பேர் உயிரிழப்பு

நடுக்கடலில் மூழ்கிய  படகு! 39 பேர் உயிரிழப்பு
X

மத்திய தரைக்கடல் பகுதியை கடந்து இத்தாலியில் உள்ள லப்துசா தீவுக்கு படகுகள் மூலம் ஏராளமான அகதிகள் சென்றுள்ளனர்.அவர்கள் சென்ற படகுகள் துறைமுக நகரமான ஸ்ஃபேக்ஸ் அருகே திடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

துனிசியாவில் அகதிகளை ஏற்றி வந்த 2 படகுகள் எதிர்பாராத விதமாக நடுக்கடலில் மூழ்கியதில் 39பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த துனிசியா பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மீட்பு படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்த 165 அகதிகளை பத்திரமாக மீட்டனர்.மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Tags

Next Story