மொராக்கோவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் உயிரிழப்பு

மொராக்கோவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் உயிரிழப்பு
X

நிலநடுக்கத்தை அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த மக்கள்

மொராக்கோ பூகம்பம்: நிலநடுக்கம் மரகேஷிலிருந்து தென்மேற்கே 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியது

மொராக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 296 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிகாரபூர்வ உயிரிழப்பு புள்ளிவிவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் மரகேஷிலிருந்து தென்மேற்கே 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் இரவு 11:11 மணிக்கு (2211 GMT) ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள அல்-ஹவுஸ் நகரில், வீடு இடிந்து விழுந்ததில் ஒரு குடும்பம் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மராகேஷில் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களின் அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.

மொராக்கோ நாட்டில் இன்றுவரை ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கம் அண்டை நாடான அல்ஜீரியாவிலும் உணரப்பட்டது, அங்கு அல்ஜீரிய குடிமைத் தற்காப்பு எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று கூறியது.

2004 ஆம் ஆண்டு மொராக்கோவின் வடகிழக்கு பகுதியில் அல் ஹொசிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 628 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 926 பேர் காயமடைந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil