27 நாடுகளில் மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி

27 நாடுகளில் மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி
X

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளுக்கும் ஃபைசர் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் 7 கோடியே 83 லட்சத்து 66 ஆயிரத்து 708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 51 லட்சத்து 28 ஆயிரத்து 966 நபர்கள். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முனைப்பில் உள்ளது.பிரிட்டன் நாடுதான் முதன்முதலாக ஃபைசர் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த முன் வந்தது.

அதன்பின் அமெரிக்காவிலும் ஃபைசர் கொரோனா தடுப்பூசி அவசர காலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனால், 50 மாகாணங்களிலும் கொரோனா தடுப்பூசி விநியோக முறை விரைவு படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்து விட்டது. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளுக்கும் ஃபைசர் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட இருக்கிறது.

Tags

Next Story
ai solutions for small business