2020ல் 50 பத்திரிகையாளர்கள் படுகாெலை, அதிர்ச்சி தகவல்

2020ல் 50 பத்திரிகையாளர்கள் படுகாெலை, அதிர்ச்சி தகவல்
X

உலகம் முழுவதும் 2020-ல் குறைந்தபட்சம் 50 ஊடகத்துறையினர் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் களச்செய்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சற்றே குறைந்திருப்பதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் 53 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. புலனாய்வு ஊடகவியலாளா்கள் கொலை செய்யப்படும் போக்கு தற்காலத்தில் அதிகரித்துள்ளது என்று எல்லைகளற்ற செய்தியாளர்கள் குழு கூறியுள்ளது.

உள்நாட்டு போராட்டங்களும் கூட ஊடகத்துறையினருக்கு ஆபத்தானதாக இருந்தது என்பதை ஆய்வு காட்டுகிறது. போராட்டங்களைப் பதிவு செய்யும் போது, நான்கு பேர் ஈராக்கிலும், இரண்டு பேர் நைஜீரியாவிலும், கொலம்பியாவில் ஒருவரும் என ஏழு ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டனர் என்று எல்லைகளற்ற செய்தியாளர்கள் குழு கூறி உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil