/* */

இந்தியா தலைமையில் நடைபெறும் 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு

'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடி 2-வது முறையாக தலைமை தாங்கி நடத்துகிறார்.

HIGHLIGHTS

இந்தியா தலைமையில் நடைபெறும் 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு
X

பிரதமர் நரேந்திரமோடி

2021 ஆண்டின் 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. அந்த வகையில், செப்டம்பர் 9, 2021 அன்று நடைபெறும் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் வழியாக தலைமையேற்று நடத்துகிறார்.

இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மார்கோஸ் ட்ராய்ஜோ, பிரிக்ஸ் வணிக கவுன்சிலின் சார்பு தலைவர் ஓங்கார் கன்வார், பிரிக்ஸ் மகளிர் வணிக கூட்டமைப்பின் சார்பு தலைவர் டாக்டர். சங்கீதா ரெட்டி ஆகியோர் உச்சிமாநாட்டின் போது பிரிக்ஸ் தலைவர்களிடம் அந்தந்த துறைகளின் கீழ் இந்த ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முடிவுகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிப்பர்.

'பிரிக்ஸ்-15: ஒத்துழைப்பு தொடா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான 'பிரிக்ஸ்' நாடுகளிடையேயான ஒத்துழைப்பு' என்ற கருப்பொருளைக் கொண்டு இந்த ஆண்டிற்கான மாநாடு நடத்தப்படுகிறது. இந்தியா தனது தலைமையின் கீழ் நான்கு முக்கிய முன்னுரிமை பகுதிகளை கோடிட்டுக் காட்டியுள்ளது. அவை, பல தரப்பு நடைமுறையில் சீா்திருத்தம், பயங்கரவாதத்துக்கு எதிரான தீவிர நடவடிக்கை, நிலைத்த வளா்ச்சி இலக்குகளை எட்ட டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை விரிவுபடுத்துவது ஆகியவை ஆகும். இதைத்தவிர, கொரோனா பாதிப்பு நிலவரம், தற்போதைய சா்வதேச பிரச்னைகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும், இந்த மாநாட்டில் தலைவா்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனா்.

'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது இது 2-வது முறையாகும். முன்னதாக 2016-ம் ஆண்டு கோவாவில் நடந்த மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்கி நடத்திவரும் உச்சி மாநாடு, பிரிக்ஸின் பதினைந்தாவது ஆண்டு விழாவுடன் ஒத்துப்போகிறது.

Updated On: 7 Sep 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  3. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  8. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  10. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...