இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
X
பைல் படம்.
By - Saral, Reporter |28 Feb 2022 12:26 PM IST
இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 12ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.
இராமேஸ்வரம் மீனவர்களின் வழக்கு இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தார்.
மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன்பிடி படகுகளை அரசுடமையாக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu