சைக்கிள் பயணத்தால் ரூ. 60 லட்சம் சேமித்த நபர்

சைக்கிள் பயணத்தால் ரூ. 60 லட்சம் சேமித்த நபர்
X

இலங்கையில் பஸ் பயணத்தைப் புறக்கணித்து சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்று வந்து 60 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை சேமித்த ஒருவரது செய்தி தற்போது வைரலாகப் பரவியுள்ளது.

இலங்கையை சேர்ந்த பீரிஸ் என்பவர் விவசாய ஆய்வுப் பணியகத்தில் பணி புரிகிறார். வேலைநாட்களில் அலுவலகத்திற்கு வருவதற்காக பஸ் பிரயாணத்தை தவிர்த்து வருகின்றார்.மேலும் அவர் தனது சைக்கிளிலேயே அவர் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குப் பயணம் செய்கின்றார்.அவரது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் சுமார் 21 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

அப்படிப் பார்த்தால் தினமும் அவர் 42 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் பயணத்தில் செலவழிப்பதோடு,இதுவரை 5 இலட்சத்திற்கும் அதிகமான தூரம் சைக்கிளில் பயணம் செய்திருக்கின்றார். கடந்த 1995ம் ஆண்டிலிருந்து இன்றுவரை சுமார் 26 வருடங்களாக அவர் இவ்வாறே தனது சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்று வந்துகொண்டிருக்கின்றார். இதன் மூலம் ரூ. 60 இலட்சத்திற்கும் மேல் சேமிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!