அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் "ஜனவரி 20"

அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் ஜனவரி 20
X
இன்று ஜனவரி 20 - அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்கிறார்.

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவர் இரண்டு முறை அதிபராக இருக்கலாம். அப்படி அதிபராகும் நபர்கள் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதிவி ஏற்கிறார்கள். இந்த நடைமுறை 1937-ல் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வாறு ஜனவரி 20 ல் முதன் முதலாக ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்றவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அவர் முதல் தற்போது அமெரிக்க அதிபராகவுள்ள டொனால்ட் டிரம்ப் உட்பட அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளும் ஜனவரி 20 ஆம் தேதிதான் பதவி ஏற்றுள்ளார்கள்.


தற்போது அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பொறுப்பேற்க உள்ளார். அமெரிக்க பார்லிமென்ட் கட்டடத்தின் முகப்பில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு கோலங்களை உருவாக்கி உள்ளனர். இதையடுத்து தலைநகர் வாஷிங்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்பு விழாவின் போது டிரம்ப் ஆதரவாளர்களால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர், நேஷனல் கார்ட் எனப்படும் அதிரடிப் படையினர் 25 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி வாஷிங்டன் மற்றும் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!