பெரிய குரங்குகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரத்தில் அமைந்துள்ள பிரபல மிருக்காட்சிசாலையில் 9 பெரிய குரங்குகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.முதல்முறையாக அமெரிக்காவில் மனிதக் குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஜனவரி மாதம் இந்த மிருகக்காட்சிசாலையில் மனித ஊழியர்களிடமிருந்து 8 கொரில்லாக்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்ததை அடுத்து, இந்த தடுப்பூசிகள் மேற்கொள்ளப்பட்டன.அதில் 4 ஒராங்குட்டான் இனக் குரங்குகள் மற்றும் மீதமுள்ள 5 போனோபோ இனத்தைச் சேர்ந்த குரங்குகள் ஆகும். அவை அனைத்தும் தலா 2 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.
கால்நடை மருந்து நிறுவனம் தயாரித்துள்ள இந்த கொரோனா தடுப்பூசியை சோதனை முறையில் இந்தக் குரங்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசி இதற்கு முன்பு நாய்கள் மற்றும் பூனைகள் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu