இந்திய விடுதலை போராளி - சுக்தேவ் தபார்.
பஞ்சாப் மாநில லூதியானாவில் பிறந்த இந்திய விடுதலை போராளி சுக்தேவ் மே 15 , 1907 ஆம் நாள் பிறந்தார்.
சுக்தேவ், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில், லயால்பூரியில் மே 15 , 1907 ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தையார் பெயர் ராம் லால் தாப்பர். லயால்பூர் தன்பத்மல் ஆரியா பள்ளியில் ஏழாவது வகுப்புவரை பயின்றார். பின்னர், சனாதன உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.
பஞ்சாப் மாநில லூதியானாவில் பிறந்த இவர் இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தில் சேர்ந்து, இந்திய விடுதலை போராளி ஆனார். பிரிட்டானிய காவல்துறை அதிகாரியான சான்டர்ஸ் மற்றும் அவர் கீழுள்ள சில அதிகாரிகள் சேசர்ந்து லாலா லஜபத் ராய் என்ற விடுதலை போராட்டக்காரரை அடித்துக்கொன்றனர். அதற்கு பலி வாங்குவதற்காக சுக்தேவ் அவருடைய கூட்டாளிகளான பகத்சிங், சிவராம் ராஜ்குரு போன்றோருடன் சேர்ந்து சான்டர்ஸ் என்ற காவல்அதிகாரியை பதிலுக்கு கொலை செய்தாராம்.
இக்கொலைவழக்கில் இம்மூன்று பேரும் லாகூர் மத்திய சிறையில் மார்ச் 23, 1931 ல் தூக்கிலிடப்பட்டனர், எவரும் அறியாமல் இருப்பதற்காக சிறைக்கு பின் பக்கமாக கடத்தப்பட்டு லாகூரிலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள சட்லஜ் ஆற்றாங்கரையில் எரியூட்டப்பட்டனராம்..
இந்த வழக்கில் இம்மூவரின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டது போலவும், தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில் (காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது. இதற்கான ஆதாரம் ஃபிரன்ட் லைன் பத்திரிக்கையில் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu