மே 14 ஈகைத் திருநாள் கவிமாலை

மே 14 ஈகைத் திருநாள் கவிமாலை
X
மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில்

மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் மெய்நிகர் வழியாக ஈகைத் திருநாள் கவிமாலை 14.05.2021 வெள்ளிக்கிழமை மாலை ஓமன் மற்றும் அமீரக நேரப்படி மாலை 5 மணிக்கும் , இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கும் நடைபெற இருக்கிறது.

கவியரங்கத்துக்கு கவிஞர் மஸ்கட் மு. பஷீர் தலைமை வகிக்கிறார். காமில் கனி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.இந்நிகழ்ச்சிக்கு சென்னை இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் சே.மு.மு முகமதலி சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்.

இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் மு. அப்துல் சமது, சர்வதேச மனித நேய விருதாளர் தெசிய கல்வி அறக்கட்டளையின் நிர்வாகி கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர்கள் பரமக்குடி ஹிதாயத்துல்லா,

தஞ்சாவூர் பேராசிரியை முனைவர் சாந்தி,

அ. ரவி, கல்லிடை வளர்மதி அசன்,

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்

சங்க தலைவர் சிங்கப்பூர் முனைவர் மு. அ. காதர்,

அபுதாபி கீதா ஸ்ரீ ராம்,

முனைவர் தவ. திரவிய தமிழினியாள்,

முனைவர் மு. ஜாபர் சாதிக்,

அபிராமம் கே.பி. ஷாகுல் ஹமீது,

இளையான்குடி பேராசிரியர் அப்துல் ரஹீம்

ஆகியோர் 'வாழ்வியல் வசந்தம் ரமலான்'

என்ற தலைப்பில் கவிதை வாசிக்கின்றனர்.

அப்துல் சலாம் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

MUDUVAI HIDAYATH

DUBAI - UAE

00971 50 51 96 433

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்