உக்ரைன் மீதான போருக்கு ரஷ்ய வீரர் எதிர்ப்பு

உக்ரைன் மீதான போருக்கு ரஷ்ய வீரர் எதிர்ப்பு
X

உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலுக்கு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரூ ரூப்லெவ் எதிர்ப்பு தெரிவித்து “போர் வேண்டாமே, ப்ளீஸ்” என கேமராவில் எழுதியுள்ளார்.

"போர் வேண்டாமே, ப்ளீஸ்" என்று ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரூ ரூப்லெவ் கேமரா லென்ஸில் எழுதியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைன் உலகம் முழுவதிலும் இருந்து உதவி கோரி வருகிறது. ஆனால் இதுவரை உக்ரைனுக்கு எந்த பெரிய நாட்டில் இருந்தும் நேரடி உதவி வரவில்லை. ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலுக்கு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரூ ரூப்லெவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் போட்டிக்கு பின்னர் "போர் வேண்டாமே, ப்ளீஸ்" என கேமராவில் எழுதி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செயலுக்கு டென்னிஸ் வீரரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!