/* */

அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்தால் ரஷ்யா போர் தொடுத்திருக்காது

உக்ரைனை நேட்டோவில் சேர்க்கமாட்டோம் என்று அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்தால் ரஷ்யா போர் தொடுத்திருக்காது

HIGHLIGHTS

அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்தால் ரஷ்யா போர் தொடுத்திருக்காது
X

இது உக்ரைன் மேப், இதில் நீலத்தில் இருப்பது கிழக்கு உக்ரெய்ன். நீல நிறத்தில் இருப்பது பூர்வகுடி ரஷ்யர்கள் வசிக்கும் டோனபாஸ் பகுதி. ஆரஞ்சு நிறத்தில் இருப்பது உக்ரேனியர்கள் வசிக்கும் பகுதியாகும். 1945ல் ஒரே நாடாக சோவியத் யூனியன் இருந்தபோது "நாம் எல்லாரும் சோவியத் குடிமக்கள், உக்ரைனியர்கள், ரஷ்யர்கள் அல்ல" என பரந்தமனபான்மையுடன் மொழி பாகுபாடு பார்க்காமல் மாநிலங்களை பிரித்தார்கள்.

1991ல் சோவியத் யூனியன் உடைந்தபோது பழைய மாநில எல்லைகளை வைத்து கொண்டே உக்ரைன் பிரிந்தது. ரஷ்யாவுடன் இணக்கமாக இருந்தவரை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை. ஆனால் உக்ரைனில் ரஷ்யர்களுக்கும், உக்ரைனியர்களுக்கும் பெருத்த அடிதடி, சண்டை இருந்து வந்தது. 2014ல் இருந்து இன்று வரை நடந்த போரில் 14 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். நேட்டோவிலும் சேருவதாக உக்ரைன் சொல்லிவர புடின் படை எடுத்துவிட்டார். உக்ரைன் தலைநகர் கீவை பிடித்து பூர்வகுடி ரஷ்யர்கள் இருக்கும் பகுதியை ரஷ்யாவுடன் இணைத்து, நேட்டோவில் சேரமாட்டோம் என வாக்குறுதியை பெற்று போர் முடிவடையும்.

உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால் கீவில் அமெரிக்க ராணுவம் நிறுத்தபட்டு ஐந்தே நிமிடத்தில் மாஸ்கோவை ஏவுகணை தாக்க முடியும். 1962ல் கியூபாவில் ரஷ்யா ஏவுகணைகளை நிறுவ முயல்கையில் அமெரிக்கா தாம், தூம் என குதித்து கியூபன் மிஸைல் கிரைசிஸை உருவாக்கியது. இப்போது கனடாவில் ரஷ்யா ஏவுகணைகளை நிறுவினால் அமெரிக்கா சும்மா இருக்குமா? உக்ரைனை நேட்டோவில் சேர்க்கமாட்டோம் என்று அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்தால் இந்த போர் நடந்திருக்காது. உக்ரைன் சோவியத் ரஷ்யா ஆட்சியில் பல கொடுமைகளை அனுபவித்த நாடு. எல்லை பிரச்னையையும், நேட்டோ பிரச்னையையும் பேசி தீர்த்து இருக்கலாம். பாவம் உக்ரைன் மக்கள்.

Updated On: 26 Feb 2022 3:08 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  3. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  5. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  6. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  7. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  8. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  10. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்