சத்ரபதி சிவாஜி தெரியும் இவர் யார் சத்ரபதி சம்பாஜி..
சத்திரபதி சம்பாஜி மராட்டியப் பேரரசர் சிவாஜி – சாயிபாய் இவர்களின் மூத்த மகன் ஆவார். 9 ஆண்டுகள் மராத்தியப் பேரரசை ஆண்ட இவரை தில்லி முகலாயர்கள் சிறை பிடித்து, சித்திரவதை செய்து கொன்றனர்.இவருக்குப் பின்னர் மராத்தியப் பேரரசராக இவரது ஒன்று விட்ட தம்பி இராஜாராமும், பின் சம்பாஜியின் மகன் சாகுஜி அரியணை ஏறினார் என்பது தெரிந்த உண்மை தெரியாத வரலாறு.
புனே அருகில் உள்ள புரந்தர்கோட்டையில் சிவாஜி – சாயிபாய் இவர்களுக்கு 1957 ம் ஆண்டு மே மாதம் 14 ம் தேதி பிறந்தார். தனது இரண்டாவது வயதில் தாய் சாயிபாய் இறந்ததால், தந்தை வழி பாட்டியான ஜிஜாபாயின் பராமரிப்பில் வளர்ந்தவர். 1665 ம்ஆண்டு சூன் 11ம் தேதி சிவாஜிக்கும் – முகலாயர்களுக்கும் ஏற்பட்ட புரந்தர் உடன்படிக்கையின் படி, ஆம்பர் நாட்டு மன்னர் ஜெய்சிங்கின் ஆக்ரா அரண்மனையில் ஒன்பது வயது சம்பாஜி பிணையாகத் தங்க வைக்கப்பட்டாராம்.
1666 ம் ஆண்டு மே மாதம் சிவாஜியும், சம்பாஜியும் தாங்களாகவே முன் வந்து ஆக்ராவில் உள்ள அவுரங்கசீப்பின் அரசவைக்கு சென்றனர். அவுரங்கசீப் இருவரையும் 1666 ம்ஆண்டு சூலை 22 ம் தேதி ஆக்ரா சிறையில் அடைத்தார்.
1980 ம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் பேரரசர் சிவாஜி இறந்த போது சம்பாஜி முகலாயர்களின் சிறையில் இருந்ததால் சிவாஜியின் இரண்டாம் மனைவியின் மூலமாக பிறந்த சத்திரபதி இராஜாராம் 1980 ஏப்ரல் 21ம் தேதி மராட்டியப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்].
இதனை அறிந்த சம்பாஜி, டெல்லி மொகலாயர்களின் சிறையிலிருந்து தப்பித்து, ராய்கட் கோட்டையை 1980 ம் ஆண்டு சூலை 20 ம் தேதி கைப்பற்றினார்.பின்னர் இராஜாராமை சிறைபிடித்து, தன்னை மராட்டியப் பேரரசராக அறிவித்துக் கொண்டாராம்..
சம்பாஜி முகலாயர்கள், தக்காண சுல்தான்கள், கிழக்கிந்திய நிறுவனம்,போர்த்துகேய கிழக்கிந்தியக் நிறுவனம் மற்றும் மைசூர் அரசுகளுடன் தொடர்ந்து பகை வளர்த்துக் கொண்டிருந்தார்.
1687ம் ஆண்டு தில்லி முகலாயப் படைகளுக்கும், மாராத்தியப் படைக்களுக்கும் நடந்த போரில், சம்பாஜி முகலாயர்களால் சிறை பிடிக்கப்பட்டார். பின்னர் பிப்ரவரி 1689 ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி சங்கமேஸ்வரர் எனுமிடத்தில் வைத்து, அவுரங்கசீப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu