மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்

மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்
X

மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை உலக தண்ணீர் தினமான 2021 மார்ச் 22 இன்று பிரதமர் மதியம் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின்போது நதிகள் இணைப்பிற்கான தேசிய கண்ணோட்ட திட்டத்தின் முதல் திட்டமான கென் பெத்வா இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சரும் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களின் முதல்வர்களும் பிரதமர் முன்னிலையில் கையெழுத்திடுவார்கள்



ஜல் சக்தி அபியான் மழைநீர் சேகரிப்பு பற்றி பார்ப்போம்

மழை நீர் சேகரிப்பு , மழை எங்கு பொழிந்தாலும், எப்போது பொழிந்தாலும், என்ற கருப்பொருளோடு நாடு முழுவதும் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். பருவமழைக்கு முந்தைய காலத்திலும், பருவமழை காலத்திலும் அதாவது 2021 மார்ச் 22-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை இது அமல்படுத்தப்படும்.

தண்ணீரின் பாதுகாப்பை முன்னிறுத்தி மக்களின் பங்களிப்போடு அடிமட்ட அளவில் மக்கள் இயக்கமாக இந்தப் பிரச்சாரம் செயல்படுத்தப்படும்.

மழைநீர் முறையாக சேமிக்கப் படுவதை உறுதி செய்வதற்காக பருவநிலை மாற்றங்கள், மண் அடுக்குகளுக்கு ஏற்றவாறு மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க அனைத்து பங்குதாரர்களையும் வலியுறுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தண்ணீர் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்க ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள (தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைத் தவிர்த்து) அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் தண்ணீர் பாதுகாப்பிற்கான நீர் உறுதிமொழியையும் கிராம சபைகள் ஏற்கும்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!