வரதட்சணையாக புத்தகம் வேண்டும் திருமண பெண் விடுத்த கோரிக்கை

வரதட்சணையாக  புத்தகம் வேண்டும்  திருமண பெண் விடுத்த கோரிக்கை
X
வரதட்சணையாக புத்தகம் வேண்டும்

ஒரு பாகிஸ்தானிய மணமகள், ஹக் மெஹ்ர் எனும் தங்கள் சமூக வழக்கப்படி, திருமணம் செய்வதற்கு வரதட்சணையாக பணம் மற்றும் நகைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் ரூபாயில் 1,00,000 (இந்திய மதிப்பில் சுமார் 46,600 ரூபாய்) மதிப்புள்ள புத்தகங்களை வழங்க வேண்டும் என கோரியுள்ளமை பலரயும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பாகிஸ்தானின் மர்தான் நகரத்தைச் சேர்ந்த நைலா ஷமல் எனும் பெண்ணே , தனது திருமணத்திற்கான தனித்துவமான இந்த கோரிக்கையை வைத்து ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் நீங்கள் அனைவரும் அறிந்தபடி, ஹக் மெஹ்ருக்காக 1,00,000 பாகிஸ்தான் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை நான் கோரியுள்ளேன். நம் சமூகத்திலிருந்து தவறான பழக்கவழக்கங்களை அகற்றுவதும் முக்கியம் என அவர் கூறியுள்ளார்.

பெரும்பாலான பெண்கள் பணம் மற்றும் நகைகளை வரதட்சணையாகக் கோருகிறார்கள் என்று அவர் கூறுகிறார். இருப்பினும், அவர்களுக்கு மரியாதை காட்ட புத்தகங்களைக் கேட்க முடிவு செய்தார். நான், ஒரு எழுத்தாளராக, புத்தகங்களுக்கு மதிப்பை இணைக்கவில்லை என்றால், சாமானியர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கலாம் என அவர் கூறினார்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 24 வயதான மணமகள் மொய்னா கான், மாமியாரிடமிருந்து 60 புத்தகங்களை வரதட்சணையாகக் கோரியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்களில் ரூ 50,000 வரை செல்லக்கூடிய பாரம்பரிய வரதட்சணையில் அவருக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆரம்பத்தில் அவரது பெற்றோர் இந்த வேண்டுகோளால் அதிர்ச்சியடைந்தனர். எனினும் மிசானூரின் குடும்பத்தினர் கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர் என்று குடும்ப உறுப்பினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story