புதின் ஒரு கொலையாளிஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காட்டம்

புதின் ஒரு கொலையாளிஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காட்டம்
X

புதின் ஒரு கொலையாளிஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றச்சாட்டு ரஷ்ய அதிபர் புதின் ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிக்க முயன்றவர் என்றும் கொலையாளி என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்தமையானது இரு தரப்புக்கும் இடையே அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை தோற்கடிக்க ரஷிய அதிபர் புதின் முயற்சித்ததாக அமெரிக்க அரசின் உளவுத் துறை அறிக்கையில் பரபரப்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை, டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப புதினும் அவரது நிர்வாகமும் முயன்றுள்ளது.அதில் குறிப்பாக டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞரான ரூடி ஜியுலானிக்கு அதில் முக்கிய பங்கு இருந்தது.

உக்ரைன் நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது உள்ள நிரூபிக்கப்படாத மோசடி வழக்கில், பைடனையும் சேர்க்க , டிரம்ப் ஆதரவாளர்கள் ரஷிய அரசின் உதவியுடன் திட்டமிட்டனர்.அமெரிக்காவிற்குள் குழப்பத்தையும் முரண்பாடுகளையும் உருவாக்குவதற்கான ரஷியாவின் முயற்சிகளே என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யஅதிபரை விமர்சித்துள்ளார்

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்