தடுப்பூசி எடுத்துக் கொண்ட பெண் குழந்தை பெற்றதும் மருத்துவர்கள் அதிர்ச்சி

தடுப்பூசி எடுத்துக் கொண்ட பெண் குழந்தை பெற்றதும் மருத்துவர்கள் அதிர்ச்சி
X

அமெரிக்காவில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின் மூன்று வாரங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், பிறந்த குழந்தையை பரிசோதனை செய்து பார்த்ததில் மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர், தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியுள்ளார்.மாடர்னா தடுப்பூசி போட்டுள்ள அந்த பெண்ணுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.இந் நிலையில், அந்த குழந்தையை பரிசோதித்து பார்த்ததில், அதன் உடலில் கொரோனவுக்கான எதிர்ப்புச் சக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை மருத்துவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஃபுளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, அதிலிருந்து உருவான எதிர்ப்பு சக்தி, தாயின் நஞ்சுக் கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து கிடைத்திருக்க கூடும் என்கின்றனர்.

மேலும், கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்படாத கர்ப்பிணி பெண், தடுப்பூசி செலுத்திக் கொண்ட சில வாரங்களிலேயே குழந்தை பிறந்ததும், அதன் உடலுக்கு ஆன்டிபயாடிக் கடத்தப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!