ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது – இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் தெரிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களை ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. இதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களும் துணை நிற்கின்றன என்று அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
பண்டாரவளையில் இன்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கூறியதாவது
தமக்கு அடிப்படை தினக்கூலியாக சம்பளமாக ரூ ,ஆயிரம் வேண்டும் என 2015 ஆம் ஆண்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதற்கு தோட்டக் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் மறுக்கப்பட்டது. இறுதியில்தொழிலாளர் நலத்துறை சம்பளத்தை நிர்ணயிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் ரூ ஆயிரம் என தொடர்பான அறிக்கைவெளியிடப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை நடைமுறைக்கு வருவதற்கு தடைவிதிக்குமாறு கோரி நிறுவனங்களின் கூட்டமைப்பு நீதிமன்றம் சென்றுள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது அரசின் உறுதிமொழி. அது எப்படியாவது நிறைவேற்றப்படவேண்டும். எனவே, நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தால் தனது நிலைப்பாடு என்னவென்பதனை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
செயல்படாத மலையகத் தலைவர்களை வைத்து ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றிவருகின்றது. இ.தொகா வினரும் கூட ஏமாற்றுகின்றனர். ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் கூட நாடகம் என்பது எங்களுக்கு தெரியும், இருந்தாலும் தொழிலாளர்களின் நலன் கருதி அமைதி காத்தோம் என்றார் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் அவர்கள்
இந்த தொழிலாளர்களை காப்பாற்றுவது நீதிமன்றமா அல்லது அரசாங்கமா காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த மலையக தோழர்கள் அறம் வெல்லுமா ! அநீதி வெல்லுமா ! பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu