வியட்நாம் புதிய தடுப்பூசியை உருவாக்கியது

வியட்நாம் புதிய தடுப்பூசியை உருவாக்கியது
X

வியட்நாமில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி நானோகோவாக்ஸ் என அழைக்கப்படுகிறது.இது இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,அரசாங்கம் புதன்கிழமை ஒரு அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

மேலும் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஸ்பூட்னிக் வி தயாரிப்பாளர் உள்ளிட்ட பிற தயாரிப்பாளர்களிடமிருந்து தடுப்பூசிகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளதாக வியட்நாம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பெற்ற அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைக் கொண்டு நாடு 16,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!