சீனாவில் புதிய வகை பாஸ்போர்ட் அறிமுகம்

சீனாவில் புதிய வகை  பாஸ்போர்ட் அறிமுகம்
X


சீனாவில் எல்லை தாண்டி பயணம் செய்வோருக்கென புதிய வகை பாஸ்போர்ட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சுகாதாரச் சான்றிதழ் என்று அழைக்கப்படும் அந்தக் பாஸ்போர்ட் சீனக் குடிமக்கள் அனைவரும் "வீசாட்" தளம் மூலம் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில் நியுக்ளிக் பரிசோதனை, நோய் எதிர்ப்புச் சக்திச் சோதனை முடிவுகள், தடுப்பூசி போடப்பட்ட விபரம் உள்ளிட்ட தகவல்கள் சான்றிதழில் இடம்பெறும்.சான்றிதழின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கவும் அதன் தகவல்களை வாசிக்கவும் சான்றிதழுடன் மறைச்சொல்லுடனான Q R. குறியீடு வழங்கப்படும்.

தனது சுகாதாரச் சான்றிதழ் எதிர்காலத்தில் சர்வதேச பயணிகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று சீனா தெரிவித்தது.தனிநபர் விபரங்களைப் பாதுகாப்பதோடு சுமுகமான முறையில் பயணம் செய்ய அது வகைசெய்யும் என்று சீனா நம்புகிறது.

Tags

Next Story
ai solutions for small business