ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு தடை

ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு தடை
X

டோக்கியோவில் இந்தாண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவலால் இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு வரும் ஜூலை மாதம் 23 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத தற்போதைய சூழலில் வெளிநாட்டு ரசிகர்களை ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்க்க அனுமதிக்க வாய்ப்பே இல்லை, இது பற்றி இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஜப்பான் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியதாக அங்குள்ள ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

Tags

Next Story
ai solutions for small business