பெண் ஊடகவியலாளர்கள் கொலை- ஐஎஸ் பொறுப்பேற்பு

பெண் ஊடகவியலாளர்கள் கொலை- ஐஎஸ் பொறுப்பேற்பு
X

ஆப்கானிஸ்தானில் ஊடகத்தில் பணியாற்றும் 3 பெண்கள் கொலைக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் செயல்படும் எனிகஸ் என்ற தனியார் ரேடியா, தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிந்த 3 பெண் ஊடகவியலாளர்கள் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தொடர்பாக பசீர் என்பவரை கைது செய்த போலீசார், அவர் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறினர். இந்நிலையில், 3 பெண் ஊடகவியலாளர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் 3 பேரும், அரசு சார்பான தொலைக்காட்சியில் பணி புரிந்ததால், சுட்டுக் கொன்றதாக ஐஎஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்